ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் சார்ந்து CEO / DEO அலுவலகங்களில் 19.07.2025 அன்று கூட்டு அமர்வு (Joint Sitting) - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பார்வையில் 2-இன்படி 16.06.2025 அன்று நடைபெற்ற சென்னை நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் GPF/DCRG/CPS இனங்கள் ஏராளமான அளவில் உரிய காரணங்கள் ஏதுமில்லாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலக் கணக்காயர் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மாவட்டங்களில் ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2025 வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகிற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்புநிதிக் கருத்துருக்களை மாநில கணக்காயர் அலுவலகத்திற்கும் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியக் கருத்துருக்களை அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கும் காலதாமதமின்றி 28.07.2025-க்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 19.07.2025 சனிக்கிழமை அன்று ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் கூட்ட அமர்வு (Joint Sitting) நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் பார்வை 1-இல் காணும் அரசுக் கடிதத்தின் படி மாவட்டக் கண்காணிப்பாளர்களாக செயல்படுகின்ற இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மதிப்புமிகு அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2025 வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகிற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்புநிதிக் கருத்துருக்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
cckkalviseithikal
மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இணையதள வழியாக ஆய்வுகள் நடத்தியும் மாவட்டங்களுக்கு செல்கின்ற போது மாவட்ட அலுவலர்களை ஆய்வு செய்து ஒருவார காலத்திற்குள் மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு காலதாமதமின்றி அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிப்பதுடன், 19.07.2025 சனிக்கிழமை அன்று ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படவுள்ள கூட்ட அமர்வு (Joint Sitting) சார்ந்து இணையதளம் (Google meet) வழியாக நடத்தப்பட உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்குமாறும் சம்பந்தப்பட்ட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments