இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.

 இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.

Click here




ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2342 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1-ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.


மேற்கண்டவாறு பெறப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணி நியமன இடம் தேர்வு செய்யும் வகையில் தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) அளவில் சென்னையில் நேரடி கலந்தாய்வு முறையில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது எனவும், அத்துடன் தெரிவு செய்து பெறப்பட்ட பணிநாடுநர்களின் வீட்டு முகவரியுடன் கூடிய பெயர்பட்டியல்கள் பார்வை 2ல் காணும் செயல்முறைகள் வாயிலாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.


அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தெரிவு பெற்ற பணிநாடுநர்களுக்கு 14.07.2025 முதல் 18.07.2025 வரை கீழ்க்கண்ட அட்டவணைப்படி நேரடி முறையில் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


மேற்குறிப்பிட்டவாறு பணிநாடுநர்களின் பெயர் இடம்பெற்றுள்ள முன்னுரிமைப் வரிசைப்படி அன்றைய நாளில் கலந்தாய்வு நடைபெறும் நேரத்திற்கு முன்பாகவே மையத்திற்கு வருகை புரிய வேண்டும் எனவும், காலதாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தாமதமாக வரும் பணிநாடுநர்களுக்கு அச்சமயத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.


மேற்குறிப்பிட்ட பணிநாடுநர்களுக்கு சென்னை-39, சேத்துப்பட்டு, ஹாரின்டன் சாலையில் உள்ள MCC Hr. Sec School மற்றும் சென்னை -10, கீழ்பாக்கம், நெ.42-48 ஆர்ம்ஸ் சாலையில் அமைந்துள்ள CSI Bain's Matric Hr. Sec. School, ஆகிய பள்ளிகளில் நடைபெறவுள்ளது. எனவே, கலந்தாய்வன்று கலந்து கொள்ளும் வகையில் பணி நியமனம் வழங்கப்படவுள்ள விவரத்தினை பணி நாடுநர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் அனுப்பிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும், அவ்வாறு தகவல் பெற்ற பணிநாடுநரின் புகைப்படம் ஒட்டிய ஆளறிச் சான்றில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) இரண்டு பிரதிகள் கையொப்பமிட்டு அனுப்பிவைக்கும் வகையில், இத்துடன் ஆளறிச் சான்றின் மாதிரிப் படிவம் இணைத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பிவைக்கப்படுகிறது.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேரடி பணி நியமனம் பெறும் பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளதால் அவ்விழாவானது 23.072025 அன்று சென்னை-3, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


இவ்வாறான பணி நியமன ஆணை வழங்கும் கலந்தாய்வு நடைபெறும் நாட்களான 14.072025 முதல் 18.072025 அன்றைக்குள் நேரடி பணிநியமன ஆணை பெறவுள்ள பணிநாடுநர்கள் மீது குற்ற வழக்குகளில் தண்டனை அல்லது குற்ற வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரிடமிருந்து மந்தண அறிக்கை பெற்று அனுப்பிவைக்கவேண்டும். மேற்குறிப்பிட்டவாறு இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள உள்ளதால் இப்பணியை அவசரமெனக் கருதி துரித நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை பெற்று அதன் விவரத்தினை உடன் இவ்வியக்ககத்திற்கு 11072025 அன்றுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநருக்காக

Post a Comment

0 Comments