மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.

 மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.

Click here




மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண்.12-இல் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:-

"மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்.

பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை பள்ளிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளம்பரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி விளக்கி, கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

Government schools that achieve an increase in student enrollment by minimum 50 will be awarded certificate of appreciation."



cckkalviseithikal


2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு வரிசை எண்.12-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, EMIS வலைதளத்தில் உள்ள மாணவர்கள் விவரமே சான்றாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட அளவில் உள்ள கண்காணிப்பு அலுவலர்கள் பார்வையின்போது ஆய்வு செய்தும் உறுதி செய்து கொண்டு இப்பாராட்டுச் சான்றிதழுக்கு பள்ளிகளை தேர்வு செய்திடலாம் என்றும், அந்தந்த மாவட்ட அளவில் தெரிவு செய்திடும் பணியை 15.08.2025க்குள் மாவட்ட அளவில் முடித்து விட வேண்டும் என்றும், தெரிவு செய்யப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களை மாவட்ட அளவில் கொண்டாடப்படும் ஆசிரியர் தின விழாவின் போது வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி அளித்து ஆணை வழங்குமாறு அரசைக் கோரியுள்ளார்.


3. மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு வரிசை எண்.12-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அதனை ஏற்று. "பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை பள்ளிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளம்பரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி விளக்கி. கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க" அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.

Post a Comment

0 Comments