முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான (இடைநிலை) ஆய்வுக் கூட்டம் 02.08.2025 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

Click here




மேற்கண்டுள்ள கூட்டத்தில் தங்கள் மாவட்டம் சார்ந்த கீழ்கண்டுள்ள செயல்பாடுகளை 15 நிமிடங்களில் விவரிக்கும் வகையில் Power Point Presentation (PPT)ஐ தயாரித்துக் கொண்டு வருமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகள்

கற்கும் திறன் மற்றும் அதுசார்ந்து அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள்

➤ Focus Learners

மாநில கற்றல் அடைவு ஆய்வு (SLAS).

கல்விசார் (Academic Oriented) நடவடிக்கைகள்

பாடத்திட்டம் நிறைவு செய்தல் (Syllabus Coverage)

திறன் (THIRAN) இயக்கம் சார்ந்த செயல்பாடுகள்

முதன்மைக் கல்வி அலுவலரால் தங்கள் மாவட்டத்தில் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள்

➤ TN SPARK

➤ Physical Education and Health Education

➤ INSPIRE MANAK AWARD SCHEME

வகுப்பறைச் செயல்பாடுகள்

>மாணவர்களின் வாசிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் அறிவியல் மற்றும்

கணித செயல்பாடுகள்

திறன் வகுப்பறைகள் மற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வக செயல்பாடுகள்

>அரசுப் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்

இக்கூட்டத்தில் 'Inspire Manak Award Scheme Session' முடிவுற்ற பின்னர், மாவட்டச் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் வேறு கூட்ட அரங்கில் தனியே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இணைப்பில் கண்டுள்ள கூட்டப்பொருளுக்கான விவரங்களை இணை இயக்குநர் வாரியாகத் தொகுத்து தொகுப்பறிக்கையின் மென்நகலினை (Soft Copy) 28.07.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் இவ்வியக்கக பிடி-1 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (pdisec.dse@gmail.com) அனுப்புமாறும், முதன்மைக் கல்வி அலுவலரது கையொப்பமிடப்பட்ட வன்நகலினை (Hard Copy) கூட்ட அரங்கில் இவ்வியக்ககப் பணியாளர்களிடம் தவறாமல் ஒப்படைக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments