தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

 தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

Click here



பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் 2025-26ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2025-26 கல்வியாண்டில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

2 அதனைத் தொடர்ந்து, மனமொத்த மாறுதல் (Mutual Transfer) கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் மீது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து பார்வை 1-ல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(6) a. A Teacher will be eligible for mutual transfer. Only when he/she is having a minimum of two years of service left before retirement.

b. Once a mutual transfer is obtained, the concerned teachers shall be eligible for

mutual transfer only after 2 years of service in the given place.

எனவே, 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் (Mutual Transfer) கோரும் விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று கீழ்காணும் அட்டணைப் படி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.

cckkalviseithikal

எனவே, தொடக்கக் கல்வி இயக்கக அலகின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாளாக 06.08.2025 புதன் கிழமைக்குள் பெற்று உரிய விதிகளின் கீழ் பரிசீலித்து மேற்கண்டவாறு ஒன்றியம் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் விருப்பமுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அளவில் ஆணை வழங்கிடவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கோரும் விருப்பமுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இவ்வியக்ககத்திற்கு 06.08.2025க்குள் கல்வி அலுவலர்களும் அனுப்பிவைத்திட அனைத்து மாவட்டக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், மனமொத்த மாறுதல் வழங்கும் பணியில் எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வகையில் கனமுடன் செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநருக்கா


Post a Comment

0 Comments