மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யவும், புதிதாக பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை 25.07.2025 அன்று பணியில் சேர அனுமதிக்குமாறும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
நடப்புக் கல்வியாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற்ற இடைநிலையாசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யவும், ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் எனில் மாறுதல் பெற்ற பள்ளியானது ஒரே ஒன்றியம் அல்லது கல்வி மாவட்டத்திற்குள் இருப்பின் பணியிலிருந்து விடுவித்து மாறுதல் பெற்ற பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்திடவும் மேலும் பதிலி ஆசிரியர் வரும் வரை அவ்வாசிரியர் பணியாற்றிய பள்ளிக்கே மாற்றுப்பணி வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஆசிரியர் வேறு மாவட்டத்திற்கு மாறுதல் பெற்றிருந்தால் அவர்களை பணிவிடுவிப்பு செய்து விட்டு பதிலி ஆசிரியர் வரும் வரை அந்த பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புதிதாக பணிநியமன ஆணை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 25.07.2025 அன்று உடற்தகுதி சான்று மற்றும் இதர கல்வி சான்றிதழ்களை சரிபார்த்து பணியில் சேர அனுமதியளிக்குமாறு சார்ந்து மாவட்டக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
cckkalviseithikal
தொடக்கக் கல்வி இயக்குநர்
0 Comments