பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம் மற்றும் விருது வழங்கும் விழா.
பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பார்வையில் கண்ட அரசாணையின்படி பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது பெறும் பள்ளிகளை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநில தேர்வுக்குழுவால் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் திருச்சிராப்பள்ளி, தேசிய கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 06.07.2025 அன்று நடைபெற உள்ளது.
மேற்கண்ட விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும் எனவும் மற்றும் சிறந்த பள்ளிகளாக தெரிவு செய்யப்பட்ட 38 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளிப் பராமரிப்புக்காக தலா ரூ.10 இலட்சம் வழங்கப்படவுள்ளது. எனவே, இணைப்பில் கண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்கண்ட விழா நடைபெறவுள்ள தேசிய கல்லூரி வளாகத்திற்கு பிற்பகல் 02.00 மணியளவில் வருகைத் தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விருது வழங்கும் விழாவிற்கு வருகை தரும் தலைமையாசிரியர்களை வரவேற்று இவ்விழாவினை சிறப்பாக நடத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருச்சி முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு:
விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம்.
பள்ளிக் கல்வி இயக்குநர்


0 Comments