பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்.

 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்.

Click here




தமிழ்நாட்டில் கல்வியின் வளர்ச்சிக்கு வழிவகுத்து, அறியாமை என்ற இருளை அகற்ற பல்லாயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து கல்விக்காக அயராது பாடுபட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி ஆண்டுதோறும் "கல்வி வளர்ச்சி நாள்" ஆகக் கொண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


பார்வை (2) இல் கண்டுள்ள அரசாணையின்படி சிறந்த பள்ளிகளை தேர்ந்து எடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பரிசு தொகையினை பயன்படுத்துவது குறித்து கீழ்கண்டவாறு நெறிமுறைகளை பின்பற்றிட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவிக்கப்பட்டுள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள 1 தேர்வு செய்யப்படும் மாணவ,மாணவியர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் இடைநிற்றலை பெருமளவில் தவிர்த்து இருக்க வேண்டும்.

2. ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக அமைந்திருத்தல் வேண்டும்.

3. புரவலர்களை அதிகப்படியாக சேர்த்து இருக்க வேண்டும்

4. கலை, இலக்கியம் நாடகம் போன்ற துறைகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதில்

சிறந்து விளங்க வேண்டும்.

5. பொது மக்கள் மற்றும் தனியாரிடமிருந்து பள்ளியின் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களது பங்களிப்பினை பெற்று பள்ளிக்குத் தேவைப்படும் தளவாட சாமான்கள் மற்றும் பல பயனளிக்கும் திட்டங்களை பெற்றிருக்க வேண்டும்.

6. பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களின் அனைத்து பாடங்களிலும் சராசரி கற்றல் அடைவுத்திறன் 60 மேல் இருத்தல் வேண்டும்.

7. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு ஆகியவை முறையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டிருக்க வேண்டும்.

cckkalviseithikal

இப்பரிசளிப்பு திட்டத்தின் மூலம் பெறும் நிதியினைக்கொண்டு அந்தந்தப் பள்ளிகளின் யரின் அடிப்படையில் குடிநீர் வசதி, சுகாதார வசதி கழிப்பிட சதி ஆம்லகம் மற்றும் நுகை மேம்பாடு கணிணிகளுக்கான மின் இணைப்புக்கட்டணம். யிட்டு திடல் பராமரிப்பு சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் வெள்ளையடித்தல் போன்ற அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

206 ஆம் கல்வியாண்டில் எதிர்வரும் 15072025 அன்று தமிழ்நாட்டில் உள்ள அணைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிகூை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப்போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்திடவும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும். 


இவ்விழாவினை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியினை பயன்படுத்தி சிறப்பாக நடத்திடவும். (அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1500 அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 1000 நடுநிலை தொடக்கப் பள்ளிக்கு ரூ.500/- ) பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments