TRB மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல்துறை விசாரணை

 TRB மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல்துறை விசாரணை.

Click here





TRB மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல்துறை விசாரணை அறிக்கை பெற தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு /நகராட்சி / மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி மற்றும் மலைச் சுழற்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி. நல்லொழுக்கம், கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளவுள்ள தெரிவு பெற்ற நபர்கள் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு குற்ற செயலில் ஈடுபட்டு குற்ற வழக்குகளில் தண்டனை அல்லது குற்ற வழக்கு எதும் நிலுவையில் உள்ளதா என்பதை பணி நியமனத்திற்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து வழங்கப்பட்டுள்ள 2346 எண்ணிக்கையிலான பட்டியல்களில் உள்ள பணிநாடுநர்களின் வீட்டு முகவரியுடன் கூடிய மாவட்ட வாரியான பட்டியல்கள் அந்தந்த வருவாய் மாவட்ட தலைநகரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்படுகிறது.

இப்பெயர் பட்டியல் பெற்றவுடன் புதியதாக நியமனம் பெறும் பணிநாடுநர்களின் விவரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி தெரிவு பெற்ற பணிநாடுநர்கள் மீது எவ்விதமான குற்ற வழக்கும் நிலுவையில் உள்ளதா என மந்தண முறையில் அறிக்கை பெற்று கோப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு மாவட்டக் கல்வி அலுவலரால் தெரிவு பெற்ற பணிநாடுநர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என மந்தண அறிக்கை பெறப்பட்டால் உடனடியாக அந்நபருக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், அந்நபரின் குற்ற வழக்கு நிலுவை குறித்த விவரம் உடனடியாக இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைத்திட வேண்டும்.

மேற்கண்ட மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரிடமிருந்து மந்தண அறிக்கை பெறும் நடவடிக்கைகளில் இரண்டு கல்வி மாவட்டங்கள் கொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக தங்கள் கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட பணிநாடுநர்களின் மந்தண அறிக்கை பெறுவதற்கு ஏதுவாக மாவட்டத் தலைநகரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலருக்கு உதவிட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கையின் மீது காலதாமதம் செய்யாமல் ஒருவார காலத்திற்குள் காவல் துறையின் அறிக்கை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் கொண்டு செயல்பட வேண்டும் στου அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி இயக்குநர் இயக்குநர்

Post a Comment

0 Comments