நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களில் உள்ள நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பார்வை (4)-ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் வாயிலாக, 2025-26ஆம் கல்வியாண்டில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் நகர்புற நிதியுதவி பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்கள் பயனடைய விரிவுபடுத்துதல் தொடர்பாக பார்வை (2)-ல் காணும் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பார்வை (3)-ல் காணும் சமூக நல ஆணையரகத்திடமிருந்து மின்னஞ்சல் மூலமாக முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக நகர்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் (இணைப்பு 1.2 மற்றும்3) பெறப்பட்டுள்ளது.
எனவே, தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நகர்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் இத்துடன் இணைப்பு 12 மற்றும் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ளவை சரியாக உள்ளதா என்பதை ஒத்திசை செய்திடவும், மாவட்டங்களில் இணைப்பு 12 மற்றும்3-ல் உள்ளது போக ஏதேனும் பள்ளிகள் விடுபட்டுள்ளது எனில் அதனை இத்துடன் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் (Excel படிவம் 1) பூர்த்தி செய்து மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) கையொப்பத்துடன் இவ்வியக்கக deeksections@gmail.com என்ற
cckkalviseithikal
மின்னஞ்சல் முகவரிக்கு 26.06.2025 மதியம் 1200 மணிக்குள் அனுப்பிடவும், அசல் பிரதியினை விரைவு அஞ்சலில் உடன் அனுப்புமாறும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பள்ளிகள் விடுபட்டுள்ளது இல்லையெனில், இன்மை அறிக்கையினை அனுப்புமாறும். மாவட்டங்களில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக நகர்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் ஏதேனும் விடுபட்டால் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) முழு பொறுப்பேற்க நேரிடும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர்
0 Comments