100 நாள் வாசிப்பு சவால் - பங்கேற்ற 4552 பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 100 நாள் வாசிப்பு சவால் - பங்கேற்ற 4552 பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here




மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கிய 100 நாட்களில் 100% மொழிப் பாடங்களை வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் முன்னேற்றம் அடையச் செய்தல் என்ற அறிவுரையை சவாலாக ஏற்று 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை 4,552 பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் முதல் சுற்று மதிப்பீட்டில் நல்நிலையினை அடைய சிறந்த முயற்சிகளை மேற்கொண்டது பாராட்டுக்குரிய செயலாகும்.



அவ்வகையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி, தேசிய கல்லூரி வளாகத்தில் 06.07.2025 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள ஏதுவாக முதல் சுற்று 100 நாள் அறைகூவலில் பங்கேற்ற பள்ளிகளில் இருந்து தலைமை

cckkalviseithikal

ஆசிரியர் / ஆசிரியர் (ஒரு பள்ளிக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில்) கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழை பெற்றுச் செல்ல உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் /ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.



மேலும் 06.07.2025 அன்று நடைபெறும் பாராட்டு விழா நிகழ்வில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களின் எண்ணிக்கை அல்லது அதற்கு இணையான எண்ணிக்கையில் 100 நாள் கற்றல் அடைவுத் திறன் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.



பாராட்டுச் சான்றிதழ் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்க பின்வரும் எண்ணிக்கையில் வட்டாரக் கல்வி அலுவலர்களை பணியமர்த்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments