💫cckkalviseithikal 💫
5,8,10,12 வகுப்பு மாணவர்களுக்கு Online TC தயார் செய்வதற்கான வழிமுறைகள்.
![]() |
| CCK EMIS |
🚀STUDENTS TC GENARATION மாற்றுச் சான்றிதழ் தயார் செய்வதற்கான வழிமுறைகள்.
💥தற்பொழுது இறுதி வகுப்பு (5,8,10,12) பயிலும் மாணவர்களுக்கு TC சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்து Save மட்டுமே கொடுக்க வேண்டும். மாநில/ மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கும் வரை எக்காரணம் கொண்டும் common pool ற்கு அனுப்புதல் கூடாது.
🌟அனைத்து வகுப்புகளுக்குமான TC Generation பணியினை தற்காலிகமாக செய்துகொள்ளலாம். அதன்படி…
📌1. TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, EE mark entry, 7.5% Verification(school & medium) , Career Guidance work மற்றும் EMIS சார்ந்த பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம்.
📌2. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.
📌3. தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.
📌4. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும்
🔗Primary - வகுப்பு 5
🔗Middle - வகுப்பு 8
🔗High scl -வகுப்பு 10
🔗HR sec - 10 & 12
முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common pool க்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும்.
⚡Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.
📌5. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு பயிலும் (Classes - Primary -5,Middle -8 ,High -10, Hr sec -12) மாணவர்களை எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.
📌6. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும்.
📌7. TC edit செய்வதற்கு reset தேவைப்பட்டால் தங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர் மூலம் தகவல் தெரிவிக்கவும்.
📝மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments