CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று 03.04.2025 விசாரணைக்கு வந்தது. விவரம்👇
CPSஐ ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் எங்கெல்ஸ் தொடர்ந்திருந்த வழக்கில், கால அவகாசம் கோரிய தமிழ்நாடு அரசு தரப்பு.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு 13 ஆண்டுகால நிலுவைக்குப் பின்னர் இன்று (03.04.2025) இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இவ்வழக்கு 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. எனவே, விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டுமென பிரெடெரிக் எங்கெல்ஸ் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதை ஏற்று கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது இரு நீதிபதிகள் அமர்வு.
0 Comments