ஆசிரியர்களுக்கான அறிவியல் மாநாடு நடைபெறுதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட வானவில் மன்றம். வகுப்பறை கற்றல் கற்பித்தலிலும் புதுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து படைப்பாற்றலுடன் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கான ஆசிரியர் மாநாடு நடத்துவதாக திட்டமிடப்பட்டது.
தமிழ்நாட்டின் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித வகுப்பறைகளில் நடைபெறும் புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரைகளை பகிரும் மேடையாக ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு வழிகாட்டப்பட்டது.
இந்த அடிப்படையில் மாநிலம் முழுவதிலும் இருந்து 643 ஆசிரியர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை மண்டல வாரியாக சமர்ப்பிக்கும் வண்ணம் மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று கீழ்காணும் பட்டியல் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடுகள் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.
cckkalviseithikal
தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டிற்கு பதிவு செய்து தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்த ஆசிரியர்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் கல்லூரி / பள்ளி முகவரி பின்னர் தெரிவிக்கப்படும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே Emis தளத்தில் பதிவு செய்து ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்த ஆசிரியர்களை மாநாட்டில் பங்கேற்று தங்கள் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்க உறுதிப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆசிரியர் அறிவியல் மாநாடுகள் நடைபெறும் நாமக்கல். புதுக்கோட்டை மதுரை மற்றும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநாடு நடைபெறும் இடம் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பட்டியல் உறுதிபடுத்துவதற்கு வானவில் மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பு அமைப்பான தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்ந்த மாநில ஒருங்கிணைப்புக் குழுவினர் உதவிசெய்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
0 Comments