பழைய ஓய்வூதியம் / பங்களிப்பு ஓய்வூதியம் கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 பழைய ஓய்வூதியம் / பங்களிப்பு ஓய்வூதியம் கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Click here



அ. பழைய ஓய்வூதிய திட்ட கருத்துருக்கள்/ பணிக்கொடை மற்றும் தொகுத்து பெறும் ஓய்வூதிய கருத்துருக்கள்.


1. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் விரைந்து மாநில  கணக்காயருக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

cckkalviseithikal


2. இனிவரும் காலங்களில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்னரே கருத்துருக்கள் தயார் செய்து மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

3. இனிவரும் காலங்களில் ஓய்வூதிய கருத்துருக்கள் OPPAS (online Pension and Provident fund Authorization System) மூலம் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.



ஆ. பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கருத்துருக்கள்( CPS) (இறுதி ஆணை)


1. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநருக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கருத்துருக்களை விரைந்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போர்டலில் விடுப்பட்ட வரவுகளை(Missing Credit) விரைந்து சரிசெய்யுமாறும், மேலும் சார்ந்த மாவட்ட கருவூலத்தை தொடர்பு கொண்டு Missing Credit பதிவுகளை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.



இ. E-SR பதிவேற்றம் மற்றும் புதுப்பித்தல்


1. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை E-SR பகுதி 1 மற்றும் பகுதி 2-ல் உள்ளீடுகளை பதிவேற்றம் செய்தல் மற்றும் அவற்றை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

2. E-SR பதிவுகளை மேற்கொண்டால் மட்டுமே இனி வரும் காலங்களில் ஓய்வூதிய கருத்துருக்களை அனுப்ப இயலும். எனவே, E-SR பகுதி-1 மற்றும் பகுதி-2 உள்ளீடுகளை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.



ஈ. வாராந்தோறும் கண்காணிக்கப்படுதல்


ஓய்வூதியம்(OPS) மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம்(CPS) ஆகிய இரு பிரிவினருக்கு ஓய்வூதிய முன்மொழிவுகள் அனுப்பப்படுவதில் நிலுவையில் உள்ளவை . வாரந்தோறும் மாவட்ட அளவில் கண்காணிக்கப்படுகின்றன.

cckkalviseithikal



உ. தொடர்பு எண்களை புதுப்பித்தல்


பள்ளிக்கல்வி இயக்க்கத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் IFHRMS- தொடர்பு எண்களை புதுப்பிக்குமாறு
தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments