கருணைப் பணி - பணிக்காலத்தில் காலமான / மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
Click here
பார்வையில் காணும் அரசாணைகளின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
பார்வை 1 மற்றும் 3-ல் காண் அரசாணையின்படி, தொகுதி 'C' மற்றும் 'D' பிரிவு
பணியிடத்திற்கான நியமன அலுவலர் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், தங்களது மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் (முதன்மைக் கல்வி அலுவலகம் /மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) / மாவட்டக் கல்வி
cckkalviseithikal
அலுவலர் (இடைநிலை) / மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) /ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி / மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம்) பணிபுரிந்து பணிக்காலத்தில் 01.09.2024 முதல் 31.01.2025 வரை காலமான / மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியிர்கள்/ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பில் கண்ட படிவத்தில் பெற்று, எவ்வித விடுதலுமின்றி முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் அனுப்பிடவும். ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் அதற்கு முந்தைய மாதத்தில், காலமான /மருத்துவ இயலாமையினால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களின் விவரங்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவிட்டு, அதனை sectioncse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : படிவம் (Excel Format மருதம் Font)
0 Comments