உயர்கல்வி வழிகாட்டி வகுப்புக்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 உயர்கல்வி வழிகாட்டி வகுப்புக்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

Click here




உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பார்வை 1-ல் காணும் கடிதத்தின் படி, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வாரம் வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளது.


எனவே பார்வை-1ல் கூறப்பட்டுள்ள செயல்முறைகளை பின்பற்றவும் மற்றும் பார்வை-2-ல் கூறியுள்ளபடி கீழ்காணும் செயல்முறைகளை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடைமுறைப் படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


1. தலைமை ஆசிரியர்களால் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஏற்கனவே மாவட்ட அளவில் பயிற்சி பெற்று வரும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியின் அனைத்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ள பிரிவு வாரியான வகுப்பு ஆசிரியர்களும் மூன்றாம் கட்டமாக மாவட்ட அளவில் எடுத்துக் கொண்ட பயிற்சியினை தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்க வேண்டும்.


2. தலைமை ஆசிரியர்களால் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்ட அனைத்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ள பிரிவு வாரியான வகுப்பு ஆசிரியர்களும் ஜனவரி மாததிற்காக கொடுக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகளை மாணவர்களுக்கு அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பாட வேளையில் மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும்.


3. மேலும் மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதனை ஊக்குவிக்கும் விதமாக என்னென்ன உயர்கல்வி பயிலலாம், அதற்கு என்ன பாடங்களைத் தெரிவு செய்யவேண்டும் என்பதனை, நான் முதல்வன் இணையத்தளத்தில் (https://naanmudhalvan.tnschools.gov.in) 2 क மற்றும் மாதந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி சார்ந்து மாநில திட்ட இயக்ககத்திலிருந்து பகிரப்படும் இணைய உள்ளடக்கங்களையும் வகுப்பாசிரியர்கள் அந்தந்த வகுப்புகளிலே ஒளிபடக்காட்டி(Projectors), திறன் பலகை (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (Hi-tech labs) வாயிலாகவும் மாணவர்களுக்கு திரையிட்டு கதை வாயிலாக எடுத்துரைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


4. மேலும், தினந்தோறும் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி சார்ந்த கருத்துகளை மாணவர்கள் சிந்திக்க தூண்டும் வகையிலும் அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும்


தலைமை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அவர்களிடையே பகிர்ந்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments