TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

 TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்- தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு 




சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம், பதவி உயர்வு TET அடிப்படையில் வழங்கவும், உச்ச நீதிமன்றத்தில் TET வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


விவரம் 🔻

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், துவரலகண்மாய் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த திரு.ம.ஜெயராஜ் என்பார் 09.09.2022 அன்று நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டமையால் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கு அப்பள்ளியிலேயே இடைநிலை ஆசிரியராகப் பணிபுரந்த திரு.ஏ.ஆரோக்கியசாமி என்பாருக்கு 16.12.2022 முதல் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மேற்படி பள்ளியில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு பகையஞ்சான் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்த திருமதி.எம்.குளோரோ ரோஸ்லின் மேரி என்பாரை 05.01.2023 அன்று மாறுதல் செய்தும் திருமதி.எம்.குளோரோ ரோஸ்லின் மேரி என்பாரை மாறுதல் செய்யப்பட்டதால் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கு சாலைக்கிராமம் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் உபரி இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்த திருமதி.ம.ஜெசி இருதய மேரி என்பாரை 06,012023 அன்று மாறுதல் செய்தும் பள்ளி நிர்வாகத்தால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், திரு.ஏ.ஆரோக்கியசாமி என்பார் துவரலகண்மாய் ஆர்.சி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டமைக்கு


cckkalviseithikal


ஒப்புதல் கோரிய கருத்துருவானது சிவகங்கை மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரால் 20.03.2023 அன்று திருப்பப்பட்டுள்ளது. இதனைத் எதிர்த்து சார்ந்த ஆசிரியர் திரு.ஏ.ஆரோக்கியசாமி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் (வழக்கு W.P.(MD).No.22775/2023) ன் படி வழக்குத் தொடர்ந்து 20.09.2023-60 19.10.2023 வரை தடையாணை பெற்றுள்ளார்.இந்நிலையில் மேற்படி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு ஆணையானது பள்ளி நிர்வாகத்தால் இரத்து செய்யப்பட்டு கல்லுவழி ஆர்.சி.தொடக்கப்பள்ளிக்கு தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக 20:1120 அன்று பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிலுவையில் இரு வழக்கானது 24.01.2024 அன்று தள்ளுபடி செய்யப்பட் ஆணையிடப்பட்டுள்ளது.மேலும், கல்லுவழி ஆர்.சி.தொடக்கப்பள்ளியி தலைமையாசிரியராகப் பணிபுரிந்த திருமதி.ச.லூர்து மேரி என்பாரை துவரலகண்மாய் ஆர்சிநடுநிலைப்பள்ளிக்கு


தலைமையாசிரியராகப் பதவி உயர் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிலுவையில் இருந்த வழக்கானது 24.012024 அன்று தள்ளுபடி செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.மேலும், கல்லுவழி ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த திருமதி.ச.லூர்து மேரி என்பாரை துவரலகண்மாய் ஆர்.சி.நடுநிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியராகப் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளித்


மேற்படி மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக தெளிவுரை வேண்டி பார்வை (3)-இல் கண்டவாறு சிவகங்கை மாவட்டக் கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலரிடமிருந்து கருத்துரு பெறப்பட்டுள்ளது. மேலும், மேற்படி கோரிக்கைத் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணியினர் சார்பாக 19.09.2024 அன்று காளையார்கோவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டதாகவும், பின்னர் 25.09.2024 அன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றதன் விவரங்கள் மற்றும் அதன் அறிக்கை வருவாய் கோட்டாட்சியரால், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், 07.11.2024 அன்று நடைபெற்ற கூட்ட அறிவுரையின்படி இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் தெளிவுரை பெற்று செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டதாக சிவகங்கை மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பெறப்பட்ட கருத்துருவானது பரிசீலிக்கப்பட்டு, கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.


cckkalviseithikal


1. அரசுக் அரசுக் கடிதம் 6.4132/.5.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்.10.05.2024-ல் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமன ஒப்புதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதில், சிறுபான்மைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


2 மேலும், சிறுபான்மைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு W.A.(MD) No.914/2017 -ன் மீது 04.11.2019 ல் பிறப்பிக்கப்பட்டத் தீர்ப்பாணையினை எதிர்த்தும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு W.A.(MD) No.859/2019 66 5 26.09.2019 6 தீர்ப்பாணையினை எதிர்த்தும் துறையால் புதுடெல்லி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் முறையே (SLP (c) Nos.20295/2022 மற்றும் 2691/2022 ஆகியவற்றின் படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்குகள் புதுடெல்லி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


எனவே. மேற்படி வழக்குகள் மாண்பமை புதுடெல்லி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மேற்படி வழக்கின் இறுதி தீர்ப்பாணை பெறப்பட்ட பிறகே, இப்பொருள் சார்ந்து பரிசீலிக்க இயலும் என சிவகங்கை மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலருக்குத் தெரிவிக்கலாகிறது..

-தொடக்கக் கல்வி இயக்குநர் 


Post a Comment

0 Comments