SBI, CANARA BANK, Unwanted links எச்சரிக்கைப் பதிவு. நாம் செய்ய வேண்டியது என்ன??
தற்போது SBI rewards, canara bank account update என பல்வேறு பெயர்களில் மெசேஜ் வருகிறது அதனுடன் ஒரு சாப்ட்வேர் link கும் அனுப்பப்படுகிறது.
இது போன்ற இணைப்புகளை வங்கிகள் எப்போதும் அனுப்புவதில்லை எனவே இதனை யாரும் திறக்க வேண்டாம்.
அவ்வாறு யாரேனும் அதனை டவுன்லோட் செய்து திறந்தால் அதில் இன்ஸ்டால் செய்யச் சொல்லி வரும். அதை நாம் இன்சால் செய்தால் இந்த சாப்ட்வேர் ஆனது நமது மொபைலில் சேவ் ஆகிவிடும் நமது மொபைலில் உள்ள விவரங்கள் அனைத்தையும் அந்த சாப்ட்வேர் எடுத்துக் கொண்டு அதனை ஹேக்கர்களுக்கு அனுப்பி விடும்.
அதன் பின்னர் நமது வாட்ஸ்அப் பெயர் மாற்றப்பட்டு அதிலிருந்து நாம் இருக்கும் அனைத்து குழுக்களுக்கும் மேற்கண்ட இரண்டு மெசேஜ்களும் அனுப்பப்படும். அதனை டெலிட் செய்தாலும் திரும்பத் திரும்ப அனுப்பி கொண்டே இருக்கும்.
ஹேக்கர்கள் நமது மொபைலை ஹேக் செய்து அதில் இருக்கும் வங்கி விவரங்களை எடுத்துக் கொள்வார்கள். பின்னர் வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என நம்முடைய எண்ணிற்கு ஓடிபி அனுப்பி அதனை கூறுமாறு சொல்லுவார்கள்.
ஓடிபிஐ நாம் அனுப்பினால் நமது மொபைல் எண் பிளாக் செய்யப்பட்டு நம்முடைய வங்கி கணக்கில் அவர்களுடைய எண்ணை இணைத்துக்கொள்வார்கள். அதன் பின்னர் அதில் உள்ள பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
தவறுதலாக இந்த இணைப்புகளை நாம் இன்சால் செய்துவிட்டால், உடனடியாக மெசேஜ் சென்றுள்ள அனைத்து குழுவிலும் சென்று delete every one கொடுத்து டெலிட் செய்ய வேண்டும். அனைத்து whatsapp குழுவில் இருந்தும் வெளியேறிவிட வேண்டும்.
அதன் பிறகு நமது மொபைலில் settings சென்று Apps பகுதியில் சென்று அந்த sbi, canara bank என நாம் எந்த இணைப்பை இன்ஸ்டால் செய்தோமோ அதனை டெலிட் செய்து விட வேண்டும்.
அதன் பின்னர் மொபைலை ஸ்கேன் செய்து clear கொடுத்தால் சரியாகிவிடும்.
மீண்டும் பிரச்சனை ஏற்பட்டால் செட்டிங்ஸ் பகுதியில் சென்று system ⏩reset (factory reset) கொடுத்தாள் அனைத்து டேட்டாவும் டெலிட் ஆகிவிடும்.
மீண்டும் புதிதாக தேவையான ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
0 Comments