கல்வி அமைச்சருக்கு ஃபேஸ்புக் இல் பள்ளியைப் பார்வையிட வேண்டுகோள் விடுக்க கட்டாய உத்தரவு.

 கல்வி அமைச்சருக்கு ஃபேஸ்புக் இல் பள்ளியைப் பார்வையிட வேண்டுகோள் விடுக்க கட்டாய உத்தரவு.


Click here



பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள நிறைகள் மற்றும் குறைகளை கண்டறிய 234/77 என்ற திட்டத்தின் கீழ் அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் டி.புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தங்கள் பள்ளியை பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அப்பள்ளி பார்வையிடப்பட்டது. 


இந்நிகழ்வில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியரை வெகுவாக பாராட்டி உள்ளார். எனவே அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியை பார்வையிட அழைப்பு விடுத்திடுமாறு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியங்களுக்குட்பட்ட கற்றல் கற்பித்தல் பணிகளில் சிறந்து விழங்கும் பள்ளிகளை அமைச்சரின் பள்ளிப் பார்வைக்கு உகந்தவாறு ஒன்றியத்தில் உள்ள சிறந்த 5 (ஐந்து) பள்ளிகள் வீதம் தேர்வு செய்து அதற்கான பெயர்பட்டியலை இவ்வலுவலகத்திற்கு 14.12.2024 மதியம் 12.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 16.12.2024 அன்றைய முதன்மைக்கல்வி அலுவலர் கூட்டத்திற்கு இப்பள்ளிகளின் பட்டியலை வழங்க வேண்டியுள்ளதால் இப்பொருள் சார்ந்து இன்மை அறிக்கை வழங்காது பள்ளிகளை அவசியம் தெரிவு செய்து அனுப்புமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments