ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 40 சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 40 சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

Click here





விவரம் 🔻 

பார்வை (1)யில் காணும் செயல்முறைகளில் https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மணற்கேணி செயலியை அணுகவும் பாட விவரங்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ள விவரமும் இச்செயலியின் வழியாக கட்டணம் எதுவுமின்றி அனைவரும் எளிதில் பாடங்களை பதிவிறக்கம் செய்ய முடியும் (Open source and can be downloaded free) என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மணற்கேணி செயலியில் இடம்பெற்றுள்ள காணொலி காட்சிகள் மாநில பாடத்திட்ட கணிதம் மற்றும் அறிவியல் புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனிமேஷன் வீடியோக்களாக, கற்கும் ஒவ்வொருவரும் நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்திற்கு வழிவகுப்பதாகவும்

cckkalviseithikal

1

வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பாடப் பொருளையும் மிகத் தெளிவாகவும் உள்ளார்ந்த புரிதலுடனும் கற்க இயலும்.

எனவே அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இந்த அனிமேஷன் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து தங்களின் வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்திட வேண்டும். மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்களின் பள்ளி பார்வை மற்றும் ஆய்வுகளின் போது இப்பொருள் தொடர்பாக உரிய மேற்பார்வையினை செய்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பார்வை (2)யில் காணும் அரசாணையில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழு தற்போது செயல்பட்டு வருகின்றது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வினை அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்திட வேண்டும் மேலும் இச்செயலியை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் நாளன்றே அவர்களின் கைபேசியில் Google Play Store-யில் இருந்து பதிவிறக்கம் செய்து கொடுப்பதுடன் அச்செயலி வழியே பாட விவரங்களை எவ்வாறு மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தி கற்க முடியும் என்பதையும் புரிய வைத்திடல் வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் நாளில் இப்பொருள் தொடர்பான ஆய்வினையும் மேற்கொண்டு மணற்கேணி செயலி முழுமையான பயன்பாட்டிற்கு கொண்ட வரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

cckkalviseithikal

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள ஆசிரியர்களை ஓர் ஒன்றியத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 40 ஆசிரியர்களை கண்டறிந்து தெரிவு செய்திடவும் அத்தகைய சிறந்த ஆசிரியர்களின் விவரங்களை ஆங்கிலத்தில் மட்டும் Excel படிவத்தில் பின்வரும் தகவல்களின் அடிப்படையில் பூர்த்தி செய்து மாவட்டவாரியாக தொகுத்து


08.01.2025ஆம் தேதிக்குள் deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மென் பிரதியாகவும் கையெழுத்துப் பிரதியை தொடக்கக் கல்வி இயக்கக முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிடவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments