இன்று 19.12.2024 நடைபெற்ற டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் சந்திப்பு விவரம்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)
மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு
cckkalviseithikal
மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் 23.10.2024 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து இன்று (18.12.2024) பேசினார்கள்.
டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் தமிழ்நாடு தொடக்கக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் திரு. மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் (பொறுப்பு) திரு. ஈ.ராஜேந்திரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளர் திரு.பா.பெரியசாமி. தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு.அ.வின்சென்ட்பால்ராஜ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு. இரா.தாஸ், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் திரு.சி. சேகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் திரு. இலா.தியோடர் ராபின்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு. சு.குணசேகரன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு.கோ.காமராஜ், JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு.சி.ஜெகநாதன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் பொதுச்செயலாளர் திரு.டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.
தொடக்கக்கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) மதிப்புமிகு. ச.கோபிதாஸ் அவர்களும், தொடக்கக்கல்வி இயக்கக நேர்முக உதவியாளர்களும், அலுவலர்களும் பங்கேற்றனர். அரசாணை எண் 243 இரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதியம் மத்திய அரசுக்கு இணையாக வழங்குவது தொடர்பாக விடுபட்ட சங்கங்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உரிய பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புதல், பதவி உயர்வு வழக்கு, EMIS பதிவேற்றப் பணிகளிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்தல், கருத்தாளர்களாக விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்துதல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பழைய முறைப்படி வழங்க வேண்டுதல் தொடர்பான வழக்கு, உயர்கல்விக்கான பின்னேற்பு ஆணை வழங்கி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்தல், ரூ.5400 தர ஊதியப் பிரச்சனை, பி.லிட்., பி.எட்., ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத்தடை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூடி 27.12.2024 அன்று மாண்புமிகு. நிதியமைச்சர், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் மீது ஆணை வழங்க வலியுறுத்துவது எனவும், 28.12.2024 அன்று சென்னையில் டிட்டோஜேக் மாநில பொதுக்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
cckkalviseithikal
இவண்
டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்
0 Comments