TPF இறுதித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை காலதாமதம் இன்றி உடனே அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
பார்வையில் காணும் அரசுக் கடிதம் மற்றும் மாநில கணக்காயரின் கடிதம் இயக்குநரின் பார்வைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
அக்கடிதத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை கோரும் விண்ணப்பங்கள் சார்ந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரால் மிகவும் காலதாமதமாக மாநில கணக்காயருக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட குறையினை களைந்திட 02.112024 முதல் 04.12.2024 வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை கோரும் விண்ணப்பங்களினை முழுமையான வடிவில் பெற்று அதனை காலம் தாழ்த்தாமல் உரிய தேதியில் சென்னை-18, மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுத்தலாமா என்பது குறித்து இயக்குநரின் ஆணை பணிவுடன் வேண்டப்படுகிறது.
cckkalviseithikal
மேலும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை பெற்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் சார்ந்த பணியாளர்களால் காலதாமதமான காலத்திற்கு நிலுவைத் தொகைக்கு வட்டி கேட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவ்வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. எனவே இந்நிகழ்வு சார்பான வழக்குகளை தவிர்க்கும் பொருட்டு
இனிவரும் காலங்களில் பொது வருங்கால வைப்பு நிதி இறுதி தொகை பெற்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு அதனடிப்படையில் பெறப்படும் புகார் மனுவின் மீது விசாரணை மேற்கொண்டு சார்ந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் மற்றும் பிரிவு பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
0 Comments