FA (a) மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.
FA ( A ) இன்று (18.11.2024) முதல் மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.
18-11-2024 முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.
வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை...
1. செயலியை ஒருமுறை logout செய்து login செய்து கொள்ளவும்.
2. மதிப்பெண்களை செயலியில் பதிவு செய்த பிறகு செயலியின் முகப்பு பகுதி (Homepage) வரை ஒரு முறை பின்னோக்கி செல்லவும். இது மதிப்பீடு சார்ந்த தரவுகளை இணையத்தில் சேமிக்க உதவியாக இருக்கும்.
3. மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு முகப்பு பகுதி வரை செல்லாமல் இருந்தாலோ அல்லது மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு உடனடியாக Logout செய்தாலோ பதிவு செய்த மதிப்பீடு சார்ந்த தரவுகளை இழக்க நேரிடலாம்.
4. மதிப்பீடு சார்ந்த தரவுகள் இணையத்தில் சேமிக்கப்பட்டவுடன் ASSESSMENT SUCCESSFULLY SAVED என்ற notification தோன்றும். அதன் பிறகு தேவைப்படும் பட்சத்தில் logout செய்து கொள்ளலாம்.
0 Comments