வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரங்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரங்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


Click here




பார்வையிற் காணும் அரசுக் கடிதத்திற்கிணங்க வீர தீரச் செயல்களுக்கான அண்ண பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது எனவும் வீரதீரச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர் எனவும். பொதுமக்களில் மூவருக்கும். அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும் எனவும் பதக்கம் பெற வயது வரம்பு எதுமில்லை எனவும் இவ்விருது ரூ.100,000/-க்கான (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும் எனவும், இப்பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.012025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையில் கண்டுள்ள அரசுக் கடிதத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு விதிகளின்படி தகுதியுடைய அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடித்தில் விருதுக்கான விண்ணப்பங்கள் httpsawardsingov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும் எனவும், அவ்விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) படிவத்தில் தெளிவாகவும். தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும்.

cckkalviseithikal

அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள். 15.12.2024 ஆகும் எனவும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனவும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனவும் பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது மாண்புமிரு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ள வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுவதற்கு. தொடக்கக் கல்வித் துறையின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் விர தீரச் செயல்கள் புரிந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவரேனும் இருப்பி அவர்களுடைய பெயர்களை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் 15.12.2024 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ hitpawards.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள படிவத்தில் அனுப்பி வைக்குமாறும், பரிந்துரை இல்லை எனில் இன்மை அறிக்கை இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்டத் (தொடக்கக்கல்வி) அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments