ஆசிரியர்களிடம் பணம் வசூலிக்க கூடாது மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

 ஆசிரியர்களிடம் பணம் வசூலிக்க கூடாது மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


Click here



சென்னை மாவட்டம் தொடக்கக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து, வட்டாரக்கல்வி அலுவலர்களின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாகி, தலைமையாசிரியர்ஆகியோர் மீது அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் பணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆகையால், தனியார் பள்ளிகள் சட்டம் 1974 விதி எண் 11(3) ன் படி பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்படும் இதர செலவினங்களை இனி வரும் காலங்களில் பள்ளிக்கு ஏற்படும் செலவினங்களை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டுமே தவிர ஆசிரியர்களிடம் எந்த காரணத்தைக் கொண்டும் மாத மாத பணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இது சார்ந்த விவரத்தினைஅனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களிடம் சார்பு செய்து கையொப்பம் பெற்று கோப்பில் வைத்துக் கொள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

cckkalviseithikal

மாவட்டக்கல்வி அலுவலர்.

(தொடக்கக் கல்வி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்)

திருவல்லிக்கேணி, சென்னை 05.

Post a Comment

0 Comments