மகிழ் முற்றம் செயல்பாடுகள் குறித்த ஆசிரியர் கையேடு.

 மகிழ் முற்றம் செயல்பாடுகள் குறித்த ஆசிரியர் கையேடு.

Click here



மகிழ் முற்றம் குழு அமைப்பு (House System) என்பது நம் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சார் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான ஓர் அமைப்பாகும். மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில் பள்ளிகளில் மாணவர்களைக் குழுக்களாகப் (Houses) பிரித்து விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நடைமுறையை மற்ற கற்றல் களங்களிலும் பின்பற்றி நமது மாநிலத்திலுள்ள பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குழு அமைப்பு என்னும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


குழுக்களை அடையாளப்படுத்த ஒவ்வொரு குழுவுக்கும் தனிப் பெயர் மற்றும் வண்ணம் அளிக்கப்படும். மாணவர்களிடையே குழுப்பணி, சமூக மனப்பான்மை, ஒருவருக்கொருவர் ஆதரவு ஆகியவை இக்குழு அமைப்பின் முதன்மை நோக்கங்களாக உள்ளன. இந்தத் திட்டமானது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பால் சமூக உணர்வை ஊக்குவிப்பதற்கும், குழுப்பணியை வளர்ப்பதற்கும், தலைமைப்பண்புகளை ஊக்குளிப்பதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குழு அமைப்பு மாணவர்களின் தலைமைத்துவம், பங்கேற்பு மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கிறது.


தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், இந்தக் குழுக்களை மேற்பார்வை செய்து, ஒழுங்கமைத்து வழிகாட்டுவதற்கு இந்தக் கையேட்டைப் பயன்படுத்தலாம். இந்தக் கையேட்டில் உங்கள் பள்ளிகளில் குழு அமைப்பை நிறுவுவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் உள்ளன. மேலும் பள்ளிச் சூழலை மேம்படுத்தவும். குழு அமைப்பின் முக்கிய மதிப்புகளை மேம்படுத்தவும் இக்கையேடு உதவும். இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஆசிரியர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும்.

cckkalviseithikal

Post a Comment

0 Comments