காந்திய சிந்தனைகளை வளர்த்தல் சார்ந்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

 காந்திய சிந்தனைகளை வளர்த்தல் சார்ந்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.




Click here


பள்ளிக் கல்வி துறையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர்வது கல்வியின் நோக்கமாக உள்ளது. பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களிடத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களின் சிந்தனைகள் மற்றும் விழுமியங்களை கொண்டு சேர்ப்பது இன்றியமையாத ஒன்றாகும். 2024-25 ஆம் ஆண்டிற்கான ஜூலை 2024 முதல் செப் 2024 முடிய உள்ள காலாண்டிற்கான இப்பொருள் சார்ந்து, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரத்தினை 03.10.2024-க்குள் அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பார்வை 2இல் காண் செயல்முறைகளில் இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்களை ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில் 25 ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப் பணித்திட்டம்) அவர்களுக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மேற்காண் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி ஒவ்வொரு மாதமும் விபரங்களை அனுப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

cckkalviseithikal

இணை இயக்குநர்,

Post a Comment

0 Comments