1 முதல் 8 ஆம் வகுப்பு வரை & இரண்டாம் பருவம் (அரையாண்டு) தேர்வு கால அட்டவணை & வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
cckkalviseithikal
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றதை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி(FA) மற்றும் தொகுத்தறி(SA) மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 09.12.2024 முதல் 23.12.2024 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான கால அட்டவணை இத்துடன் இணைப்பு - 1 & 2 ல் இணைக்கப்பட்டுள்ளது. இத்தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கிடவும் நடுநிலைப் பள்ளியில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ள பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) இரண்டாம் பருவத்திற்கான தொகுத்திறி மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments