தீபாவளி பண்டிகையின் போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநரின் கடிதம்.
Click here
விபத்தற்ற தீபாவளியாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுகிறேன்.
(அ). ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத் தலைவர்கள் நாள்தோறும் பள்ளியின் காலை இறை வணக்கத்திற்கு பிறகோ அல்லது அணி திரளும்போதோ தோராயமாக 5 நிமிடங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீப்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவுரையாற்றுவது.
(ஆ). மாணவர்களிடையே தீபாவளி பண்டிகையினை விபத்தில்லாத வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து அவர்களது அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல்.
(இ). ஒரு குறிப்பிட்ட இடைவெளி தருணத்தில் 5-லிருந்து 10 நிமிடம் தீப்பாதுகாப்பு செய்திகள் குறித்து சிலேடை நிகழ்ச்சி நடத்துதல்.
(ஈ). தீப்பாதுகாப்பு குறித்து வரைபட போட்டி நடத்தி சிறந்ததாகத் தேர்ந்தேடுக்கப்படும் வரைபடத்திற்கு பரிசளித்தல்.
(உ). குடிசைப் பகுதிகள் ஏதேனும் பள்ளி நிர்வாகத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்ட செயலபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தால், அவர்களிடையே தீப்பாதுகாப்பு குறித்தான சிலேடை நிகழ்ச்சி நடத்துதல்.
(எ), வெடிக்காத தவிர்த்தல். பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை
cckkalviseithikal
(ஏ) விவரம் அறியாத இளஞ்சிறார்களை வெடிகளைக் கொளுத்த அனுமதியாதிருத்தல்,
(5) மேலும், இத்துறையைச் சார்ந்தவர்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வருகை புரிந்து மேற்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, என்பதோ அல்லது அறிவுரை வழங்குவது என்பதோ இயலாத ஒன்றாகும். ஆயினும், இது தொடர்பாக எங்களுக்கு வரும் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலித்து ஐயப்பாடின்றி எங்களால் இயன்றவரை செய்வோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, பள்ளி நிர்வாகத்தினரே அவர்களது சொந்த ஏற்பாட்டினில் அவர்களுக்குள்ள வழிமுறைகளின்படி மேற்படி திட்டத்தினை அவர்களே செயல்படுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதன் மூலம் தீபாவளி பண்டிகையின்போது இளஞ்சிறார்கள் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு விதிகளை அனுசரிக்க நினைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும், பொதுமக்களின் உயிர்களையும் உடமைகளையும் பட்டாசு தீ விபத்துகளிலிருந்து காப்பாற்றிட ஒரு வழியாக அமையும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(6) தீபாவளி சமயத்தில் மேற்படி நிகழ்ச்சிகளை நடத்துவதன்
மூலம் தீ பாதுகாப்பு குறித்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
குறித்தான பல நல்ல கருத்துக்களை மனதில் நன்கு பதியவைத்து
31.11.2023 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளியின்போது குழந்தைகள்,
மாணவ மாணவிகள் மறந்திடாமல் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை
அவர்களே செயல்படுத்திட ஏதுவாக இருக்குமென்பதையும் தெரிவித்துக்
கொள்கிறேன். எனவே, பள்ளி நிர்வாகத்தினரே மேற்படி நிகழ்ச்சிகளை
குழந்தைகள், மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளத்தக்க வகையில்,
அவர்களுக்குரிய உத்திகளை கையாளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments