ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதிகளில் சிசிடிவி கேமரா, பயோமெட்ரிக் செயல்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதிகளில் சிசிடிவி கேமரா, பயோமெட்ரிக்  செயல்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்.


Click here





ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து விடுதிகளிலும் CCTV மற்றும் Bio Metric Device பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 21.10.2024 அன்று Google Meet இன் மூலம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள 422 விடுதிகளை சேர்ந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் ஆ கிய அலுவலர்களுக்கு நல்லோசையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாணாக்கர் தரவுகளை Bio Metric Device இல் Push செய்வது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. எனவே இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடுதிகளுக்கும் 23.10.2024 காலை 12 மணிக்குள் Bio Metric கருவிக்கு மாணாக்கர்களின் விவரங்களை Push செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

cckkalviseithikal

மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நல அலுவலரால் Push செய்யப்படும் மாணாக்கரின் Finger Print மற்றும் Face ஆகிய விவரங்களை விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள Bio Metric Device இல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பான பயிற்சி இயக்குநரகத்திலிருந்து விடுதி காப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதால். இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பயிற்சி நேரங்களில் தொடர்புடைய விடுதி காப்பாளர்களை ஒரு மாணாக்கருடன் சேர்ந்து Google Meet யில் பங்கேற்றிட உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆதிதிரவிடர் நல இயக்குநருக்காக

Post a Comment

0 Comments