2013-14ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.03.2025 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு.
Click here
பார்வை 1- காணும் அரசாணைகளில் 2013-2014-ஆம் கல்வியாண்டில் 100 அரசு/மாநகராட்சி/நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்திட அனுமதி வழங்கியும், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளி ஒவ்வொன்றிலும் உள்ள உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்தை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடமாக நிலை (upgraded) உயர்த்திட ஒப்பளிப்பு வழங்கியும், நிலை உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி
cckkalviseithikal
ஒவ்வொன்றிற்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு
பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அவை நிரப்பப்படும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக ஒப்பளிப்பு செய்தும் ஆணை வெளியிடப்பட்டது. பார்வை 2-இல் காணும் அரசாணையில், பார்வை 1-இல் காணும் அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு 01.07.2021 முதல் 30.06.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில், 01.10.2024 (ιρού 31.03.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பார்வை 4-இல் காணும் கடிதத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதத்தில் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments