10.03.2020 க்கு முன் உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு

10.03.2020 க்கு முன் உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு.




ஊக்க ஊதிய உயர்வு வழக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) சார்பாக தொடர்ந்த வழக்கில் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி என தீர்ப்பு.


மதுரை உயர்நீதிமன்றத்தில் TNPTF சார்பாக 10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்றவர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு பெறுவது சார்பான வழக்கில்  10.03.2020. -க்கு முன் உயர்கல்வி முடித்து வழக்கு தொடர்ந்த 974 ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடையவர்கள் என இன்று (02.08.2024) நீதியரசர் தீர்ப்பளித்துள்ளார்.


 இவ்வழக்கில் நம் இயக்கம் சார்பாக சிறப்பாக வழக்கு நடத்திய வழக்கறிஞர்கள் திரு. லஜபதி ராய்  அவர்களுக்கும், திரு.அஸ்வின் அவர்களுக்கும் TNPTF சார்பாக நன்றிகள் பல.


இத் தீர்ப்பை பயன்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் 622 ஆசிரியர்கள் சார்பாக மேல்முறையீடு செய்து சாதகமான தீர்ப்பு பெற அனைத்து முயற்சிகளும் உடனே தொடங்குவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


 தகவல் பகிர்வு 

மா. ஆரோக்கியராஜ் 

மாநில துணைத்தலைவர்

TNPTF 

Post a Comment

0 Comments