'இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இல்லம் தேடி கல்வி திட்டம் 2.0 மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 2.O




1. மேலே உள்ள விதிகளின் படி இந்த இடங்களில் மட்டும் மையங்கள் செயல்படும் பிற இடங்களில் செயல்படாது. 

2. கோவை மாவட்டத்தில் இதுவரை இயங்கிவந்த 5500 மையங்கள் தற்போது 922 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளன.

3. உயர்தொடக்க வகுப்பு மையங்கள் இனி செயல்படாது. உயர்தொடக்க வகுப்பு தன்னார்வலர்கள் திட்டத்திலிருந்து விடுவிக்கப்படுவர். தேவைப்படின் தொடக்க வகுப்பு மையங்களுக்கு மாற்றப்படுவர்.

4. ஆனைமலையில் 220, வால்பாறையில் 45, இவை நீங்கலாக கோவை மாவட்ட நகரப்பகுதி, குடிசைப்பகுதிகளுக்கு 677 மையங்கள் மட்டும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

5. இனி தன்னார்வலர்களில் ஒருவரே இப்பணிகளை ஒருங்கிணைப்பார்.

6. ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் இனி இத்திட்டத்தில் செயல்படமாட்டார்.


இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் உள்ள ஆசிரியர்களை ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கள் பணியில் சேர்ந்து கொள்ளவும் இல்லம் தேடித் கல்வி திட்ட மையங்களை குறைத்து அதே தன்னார்வலர்கள் கொண்டு செயல்படுத்தவும் மாநில இல்லம் தேடி கல்வித் திட்ட குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments