நோட்டாவுக்கு வாக்களிப்பது சரியா? We are in Democratic Emergency! Say NO to NOTA _✍🏼செல்வ.ரஞ்சித்குமார்_

 நோட்டாவுக்கு வாக்களிப்பது சரியா? 

We are in Democratic Emergency! Say NO to NOTA

_✍🏼செல்வ.ரஞ்சித்குமார்_




ஓட்டு போடுறது என்னோட சனநாயகக்கடம...! ஆனா உருப்படியா ஒருத்தருமில்ல.... So நான் NOTAவுக்கு ஓட்டப்போட்டு என்னோட கடமைய ஆற்றப் போறேன் என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஏன் நாமேகூட கூறியிருப்போம். இதனால் நமக்கு நன்மை விளையுமா? வாங்க வரலாற ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.


அதற்குமுன் நோட்டா பற்றி. . .


> உச்சநீதி மன்றம் 27.09.2013-ல் அளித்த தீர்ப்பின்படி, வேட்பாளரை நிராகரிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு வசதியாக அதற்குரிய 'நோட்டா' ```(NOTA : None Of The Above)``` பொத்தான் வாக்குப் பதிவு எந்திரத்தில் முதன்முறையாக பொருத்தப்பட்டது.


இதனால், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களும் மக்களாட்சியில் தனது  பங்களிப்பை அளிக்க (உங்களால் செலுத்தப்படாத வாக்கை மற்றவர் கள்ளவாக்காக அளிப்பதைத் தடுப்பதையும்) 'நோட்டா' உறுதி செய்தது.


அதேநேரம், தவறான வேட்பாளரையோ / கட்சியையோ நாம் நிராகரித்து நோட்டாவிற்கு வாக்களிப்பதால், நம்மால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளரைச் சார்ந்த கட்சிகள் வருங்காலங்களில் தனது தவறான போக்கைத் திருத்திக் கொள்ளும் எனும் மூடநம்பிக்கையும், நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு நாடு செழிக்கும் என்ற பச்சைப்பொய்யும் மக்கள் மனதில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளன.


கடந்த தேர்தல்களில் சில கட்சிகளின் வேட்பாளர்கள் நோட்டாவிற்கும் கீழாக வாக்கு பெற்ற நிலையிலும், அக்கட்சிகளுக்கு இனியேனும் மக்கள் நலனை முன்வைத்து நாம் செயல்பட வேண்டுமென்ற மனமாற்றம் நாளது தேதிவரை ஏற்படவேயில்லை என்பதே நம் கண் முன் உள்ள சாட்சி.


எனவே, நோட்டா என்பது எந்நிலையிலும் மக்களாட்சியில் கட்சிகளை நெறிப்படுத்தும் மருந்தோ ஆயுதமோ அல்ல!


சரி. நாம் நோட்டாவிற்கு வாக்களித்து நமது மக்களாட்சிக் கடமையை ஆற்றுவதால் யாருக்குப் பயன்?


1000 வாக்களர்களில் 999 நபர்கள் நோட்டாவிற்கு வாக்களித்தாலும், 999 வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு வேட்பாளர் ஒருவர் ஒற்றை வாக்கைப் பெற்றாலும், அவரே வெற்றி பெற்று ச.ம.உ / நா.ம.உ ஆவார்.


சட்டம் இப்படியிருக்க, நோட்டாவிற்கு அளித்து நமக்கு நாமே சட்டம் மாட்டிக்கொண்டு சுவற்றில் தொங்க வேண்டுமா?


ஒட்டுமொத்த அளவில் பெரும்பான்மை வாக்காளர்களால் வாக்களிக்காது ஒதுக்கப்பட்ட கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடத்திய அலங்கோலங்களையும் நாம் கடந்து வந்துள்ளோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.


அப்ப வேட்பாளர் சரியில்லேனா நோட்டாவுல போடக்கூடாதுனா. . . ஓட்டே போடாமா வீட்லயே இருந்து IPL பாத்தா என்ன? என்று எண்ணுவோரே,


😴சிந்தியுங்கள்😴


போட்டியிடும் வேட்பாளர் அனைவருமே 100% நல்லவர்கள் என்று நான் கூறவில்லை. அவர்களுள் குறைந்தபட்ச நல்லவர் (நாட்டிற்கு!) யாரென்பதைப் பார்த்து வாக்களியுங்கள்.


இன்றைய தேதியில் தேர்தல் என்பது நன்மைக்கும் தீமைக்குமான போட்டி அல்ல. கொஞ்சத் தீமைக்கும் அதீதத் தீமைக்குமான போட்டி.


இதில் நாம் நமது வாக்குகளை அதீதத் தீமைக்கு எதிராகக் குவிக்காதே போனால்,  அந்த அதீதத் தீமை நம் நாட்டையே மீள முடியாத பாதாளத்திற்குள் மேலும் தள்ளிவிடக் கூடும்.


மஞ்ஞுமல் பாய்ஸ் சுபாஸ் போல நமது நாட்டின் மக்களாட்சியும் குத்துயிரும் கொலையுயிருமாக கொடூரர்களின் குகைக்குள் கிடக்கிறது. அதனை மீட்டுக் கொணரும் குட்டன்களாக நாம் மாறியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை நினைவில் வைத்து வாக்களியுங்கள். நம் நாட்டின் மக்களாட்சிக்கு வாழ்வளியுங்கள்.



*மாற்றம் என்பது*


*உங்களால் பிறப்பது❗*


*புரட்சி என்பது*


*கொதிப்பதால் உதிப்பது❗*



*மாற்றம் காணும்*


*மக்கள் புரட்சியை*


*அரை நொடியில்*


*விரல் நுனியில்*


*நிகழ்த்திக் காட்டுவது*


*தேர்தல் மட்டுமே❗*



*புரட்சிக்கான காலம்*


*குறித்தாயிற்று, 19.04.24❗*



*இடப்போவது கருமையல்ல,*


*மக்களாட்சியின் வெற்றித்திலகம்❗*



*அழுத்துவது பொத்தானையல்ல,*


*மக்கள்விரோதக் குரல்வளையை❗*



*செய்யத்துணியுங்கள்  மக்களாட்சிக்கான*


*பச்சைப் படுகொலையை❗*



*கடந்துவந்ததை சிந்தையிலேற்றி*


*விரலுக்குக் கட்டளையிடுங்கள்,*


*வெற்றித் திலகமிட்டு*


*கொன்று குவிக்கட்டும். . .*


*மக்களாட்சியின் நச்சுக்கிருமிகளை❗*

Post a Comment

0 Comments