ஏப்ரல் மாத ஊதியத்தில் வருமான வரியாக இரு மடங்கு தொகை IFHRMS மூலம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி!!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாத வருமானத்தில் வருமான வரியாக எவ்வளவு தொகை பிடித்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டு அதன்படி பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ஏப்ரல் மாதம் முதல் IFHRMS இணையதளம் மூலம் தானாக பிடித்தம் செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் பழைய முறை அல்லது புதிய முறையில் பிடித்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
பழைய முறை தேர்வு செய்தவர்கள் IFHRMS வெப்சைட்டில் சென்று வீட்டுக் கடன், எல்ஐசி, குழந்தைகளுக்கான படிப்பு கட்டணம் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது அனைவருக்கும் ஒரு வருட ஊதியம் கணக்கிடப்பட்டு பத்து தவணைகளாக பிடித்தம் செய்யும் வகையில் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளதால் ஏப்ரல் மாத ஊதியத்தில் வருமான வரியாக இரு மடங்கு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் ஊதியப் பட்டியல் பிரிண்ட் எடுத்தபோது தெரியவந்துள்ளது.
இதனால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments