பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் பணி நீட்டிப்பு வழங்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் தனி கவனத்திற்கு,
சில மாவட்டங்களில் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றபின் கிடைக்கக்கூடிய பணி நீட்டிப்பு காலம் வழங்காமல் ஆசிரியர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக தகவல்கள் பெறப்படுகிறது.
ஆசிரியர்கள் பணி புரியும் பள்ளியில் போதுமான மாணவர் எண்ணிக்கை இருக்கும்போது ஆசிரியர்களுடைய உடல் தகுதிச் சான்று அடிப்படையில் அவர்களுக்கான பணி நீட்டிப்பு காலம் எவ்வித காலதாமதம் இன்றி வட்டார கல்வி அலுவலர்கள் வழங்குவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஓய்வு பெறுகின்ற வயதில் இருக்கக்கூடிய மூத்த ஆசிரியர்களை வீணாக சிரமத்திற்கு உள்ளாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இது போன்ற புகார்கள் பெறப்பட்டு தகவல்களில் உண்மை இருப்பின் வட்டார கல்வி அலுவலர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.
எனவே மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரை வழங்கி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments