ஹீட் ஸ்ட்ரோக் - வெப்ப வாதம் வராமல் தவிர்ப்பது எப்படி?
> செய்ய வேண்டியவை
தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்கவேண்டும்.
லேசான, வெளிர் நிற ஆடையணிந்து பாதுகாப்பு கண்ணாடி, குடை, தொப்பி மற்றும் காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
பிரயாணத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.
வெளியே வேலை செய்யும்போது, தொப்பி குடை ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
தலை, கழுத்து, முகம் மற்றும் கால்களின் மேல் ஈரத்துணியை பயன்படுத்தலாம்.
லஸ்ஸி, கஞ்சி, பழச்சாறு, மோர் போன்றவற்றை பயன்படுத்தவும்.
குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.
> தவிர்க்க வேண்டியவை
வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். முக்கியமாக காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை,
வெப்பம் அதிகமாக இருக்கும் போது கடினமான உழைப்பை தவிர்க்கவும்.
மதுபானம், டீ, காபி, சோடா வகை பானங்களைத் தவிர்க்கவும்.
0 Comments