அங்கன்வாடியில் உள்ள 5+ குழந்தைகளை EMIS மூலம் பள்ளியில் சேர்ப்பதற்கான வழிமுறைகள்.
EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS
தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது.
Chrome ல் (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents கிளிக் செய்யவும்.
கிளிக் செய்ததும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும்.
பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற option ஐக் கிளிக் செய்யவும்.
திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ...
அதன் அடியில் அழைப்பின் விபரமும் தோன்றும்.
(தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் )
அழைப்பின் விபரம் :
1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது.
2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை.
3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல.
4. தவறான எண்.
மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்.
இவற்றில் .
அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது என்பதை தேர்வு செய்தால்
1. பதிலளித்தவர் யார் ?
2. ஏதேனும் பள்ளியில் குழந்தையை சேர்க்கை செய்யப்பட்டுள்ளதா?
3. ஆம் எனில்.
அரசு பள்ளி,
அரசு உதவி பெறும் பள்ளி,
தனியார் பள்ளி.
இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்.
0 Comments