இதுவரை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்களையும் எமிஸ் இல் பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.

 இதுவரை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்களையும் எமிஸ் இல் பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.



அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி 2 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்து உள்ளார்கள்.


 தற்போது பொது சுகாதாரத் துறையின் மூலம் பெறப்பட்ட விவரங்கள் தங்களுடைய பள்ளி  தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொள்கின்ற வகையில் EMIS WEBSITE ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களுக்குரிய தலைமை ஆசிரியர்களின் LOGIN ID  மூலம் EMIS வெப்சைட்டில் சென்று பள்ளி அமைந்துள்ள கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்களை தொடர்பு கொள்கின்ற வகையில் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் நாளை முதல் இவர்களை தொடர்பு கொண்டு நமது பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ,தனியார் பள்ளி என அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யுமாறு அதனை EMIS தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 இப்பதிவினை மதிப்பிற்குரிய செயலாளர் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே எவ்வித ,சுணக்கமுன்றி நாளை முதல் திறம்பட அனைத்து தலைமை ஆசிரியர்களும் செயல்பட்டு மாணவர் சேர்க்கை 100% உறுதி செய்வதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனி கவனம் எடுத்து கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை செய்வதையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதையும் உறுதி செய்து தங்கள் வட்டாரத்தில் சிறப்பாக செயல்படுவதை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Post a Comment

0 Comments