பயிற்சிகளைப் புறக்கணிக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள்!!!
அனைத்து தொடக்க நிலை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோ ஜாக் முடிவின்படி ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்கள் பங்கெடுக்க மாட்டோம்.
EMIS online பதிவுகளைச் செய்ய மாட்டோம் என அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்களே ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கும் பயிற்சியை ஒட்டு மொத்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புறக்கணித்து இருப்பது ஆசிரியர் இயக்கங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
BRTE க்கள் இல்லாத பயிற்சி..
சமீபத்தில் எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சிக் கருத்தாளர்களுக்கான பயிற்சியில் கலந்து கொள்ளும் கருத்தாளர்கள் பெயர்ப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில ஒன்றியங்களில் ஒரு ஆசிரியர் பயிற்றுநர் பெயர் கூட இடம் பெறாதது ஆசிரியர் சங்கங்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.டிட்டோ ஜாக்கின் முடிவை பயிற்றுநர்களுக்கான சங்கம் நிறைவேற்ற முயல்வதாகப் பேசப்படுகிறது.
https://cckkalviseithikal.blogspot.com
இனி வரும் பயிற்சிகளில் ஆசிரிய்ப் பயிற்றுநர்கள் யாரும் கருத்தாளர்களாகக் கலந்து கொள்ளக் கூடாது என ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான சங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிவெடுத்து இருப்பதாகத் தெரிகிறது.
விந்தையிலும் விந்தை
ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு வட்டார வளமையங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒருவர் கூட இல்லாமல் பயிற்சிக் கருத்தாளர்களாக 100% ஆசிரியர்களை மட்டுமே வைத்து ஆசிரியர்களுக்கே பயிற்சி வழங்குவது என்பது எந்தத் துறையிலும் இல்லாத விந்தையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுவது ஆசிரியர்களிடம் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.
தற்போது எந்த ஆசிரியர் பயிற்றுநர்களும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்காமல் பயிற்சி மையங்களில் உயர் அலுவலர்களைப் போன்று பயிற்சிகளைத் தொடங்கி வைப்பது மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளைச் சரி செய்வது டீ,வடை கணக்கு எழுதுவது இறுதி வரை வெறும் பார்வையாளர்களைப் போலவே அமர்ந்து இருந்து விட்டு கடைசியாக பயிற்சியை முடித்து வைத்துச் செல்வது என்பது வாடிக்கையாக உள்ளது.இது ஆசிரியர் பயிற்றுநர்களின் மீது ஆசிரியர்களுக்கு இருந்த பெரும் மதிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது என்பது ஆசிரியர்களிடம் பரவலாகப் பேசப்படுகிறது.
இனி பயிற்சிகள் நடைபெறுமா..?
ஆசிரியர் சங்கங்களுக்கு போட்டியாக பயிற்றுநர்கள் சங்கமும் கருத்தாளர்களுக்கான பயிற்சியை புறக்கணிக்க முடிவெடுத்து இருப்பதால் இனி வரும் காலங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தாண்டு இதுவரை எந்தப் பயிற்சியும் வழங்காத ஆசிரியர் பயிற்றுநர்களின் பெயர்ப்பட்டியல் ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு ஒன்றியம் வாரியாக இயக்கங்களின் சார்பாக வெளியிடப்படும் மிக விரைவில்.
0 Comments