ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண புதிய திட்டம்.
ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அவற்றுக்கு தீர்வு காண புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அவர்கள் புதிய முயற்சி எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குறைகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
கோரிக்கைகள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? அதற்கான காரணம் என்ன? பரிசீலனையில் உள்ளதா? அல்லது மனுவில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று இணையதளம் வாயிலாக முழுக்க முழுக்க ஆசிரியர்களினுடைய குறைகளைத் தீர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளதாகத் தகவல்.
எனவே ஒரு அலுவலகத்தில் ஆசிரியரிடம் இருந்து மனு பெறப்பட்ட நாள் அதனை அலுவலர்கள் அதன் மீது எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடனும் ஆதாரத்துடனும் நாள்வாரியாக அது பதியப்படும் என்பதால் இது எதிர்காலத்தில் பல்வேறு வழக்கு சிக்கல்களை தவிர்க்கும் என்று அரசு கருதுகிறது. மேலும் இதன்மூலம் எந்த ஒரு அதிகாரியும் ஆசிரியர்களின் மனுக்களை அலட்சியப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் 5000 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த முடிவை அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
0 Comments