3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட SEAS தேர்வு. மாநிலம் முழுவதும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது.
மற்றொரு NEPயில் சொல்லப்பட்ட கூறு சத்தமில்லாமல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளதா?
3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை கடுமையாக எதிர்த்தது தமிழ்நாடு. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது.
இப்போது 3,6,9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) நடத்துவதற்கு வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டுளது. அதற்கான வழிகாட்டுதல் சுற்றறிக்கை அக்டோபர் 3ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. 27047 பள்ளிகளில் இது நடைபெற உள்ளது. ஏழு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எடுக்க உள்ளனர். ஏற்கனவே கேரளா, ஆந்திரா மாநிலங்களும் இதனை நடத்த அறிவித்துள்ளன.
இத்தேர்வுகள் பொதுத்தேர்வுகள் போலவே நடக்கும்போல உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த NAS (National Assessment Survey)வை ஒத்தது. மாநிலங்களே நடத்தி தேசிய அளவில் அது ஒருங்கிணைக்கப்படும்.
நம்ம பெரிய அண்ணன் NEPயில் சொல்லப்பட்டதுதான். PARAKH என்ற அமைப்பு தேசிய அளவில் மதிப்பீட்டில் மாற்றங்களைக்கொண்டு வரும். இது நாடு முழுக்க பல்வேறு Educational Boardகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவர ஏற்படுத்தப்பட்டது.
ஆசிரியர்களின் கவனத்திற்கு வந்துள்ளது அல்லது இன்னும் செய்தி போய் சேரவில்லையா என்று தெரியவில்லை.
என்ன எதிர்வினை வருகின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.
- விழியன்
0 Comments