ஆன்லைன் தேர்வு, எமிஸ் குளறுபடிகளால் மன உளைச்சலில் ஆசிரியை மரணம். தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

 ஆன்லைன் தேர்வு, எமிஸ் குளறுபடிகளால் மன உளைச்சலில் ஆசிரியை  மரணம். தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் கொந்தளிப்பு.




திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் அரசுப்பள்ளி இயங்கி வருகிறது.



இங்கு, லால்குடி அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெய மேரி (52) இடைநிலை ஆசிரியராக வருகிறார். 1999ம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளாக இப்பள்ளி யில் பணிபுரிந்து வரும் ஜெயமேரி 3ம் வகுப்பு மரணவ மாணவியருக்கு ஆசிரியராக உள்ளார்.


தற்போது மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 'எமிஸ் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடை பெறுகிறது. இப்பகுதி கிராமங்களில் இண்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 'எமிஸ்' டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .



இந்நிலையில், அன்னாள் ஜெய மேரி நேற்று மாணவர்களுக்கு 'எமிஸ் ஆன்லைன்' தேர்வு நடத்தியுள்ளார். அப்போது முந்தைய நாள் நடத்திய தமிழ் தேர்வு 'நாட் அசஸ்டு” என்று வந்துள்ளது.  எனவே அருகில் உள்ள பள்ளி ஆசிரியரிடம் இது குறித்து கேட்டுக் கொண்டிருந்தார்.




அப்போது திடீரென்று  மயங்கி கீழே விழுந்த அவருக்கு சக ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை செய்து புள்ளம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாகக் கூறினர். இச்சம்பவத்தால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.








ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் 


இதுபோல் புள்ளம்படி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி கிடைக்காததால் ஆன்லைன் டெஸ்ட் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Post a Comment

0 Comments