மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
சென்னை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களும் அரசும் இணையும் இந்த முன்னெடுப்பு 'நம்ம ஸ்கூல்' திட்டம் என்று அழைக்கப்படுகிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. வேணு சீனிவாசனை தலைவராகவும், செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு.விஸ்வநாதன் ஆனந்தை நல்லெண்ணத் தூதராகவும் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர்.
முன்னாள் மாணவர்கள், உள்ளூர்ச் சமூகம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்கான தளத்தை உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இணையதள முகவரி👇👇👇
Click here
நிகழ்வை துவக்கி வைத்து பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசுப் பள்ளிகள் அரசின் சொத்து மட்டுமல்ல. மக்களின் சொத்தும்தான் நமது மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு துணை நிற்பதற்காக ஒன்றிணைய விரும்பும் அனைவருடனும் கைகோர்க்க அரசு விழைகிறது. இம்முயற்சிக்கென பெறப்படும் பங்களிப்பு அனைத்தும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும்" எனத் தெரிவித்தார்.
0 Comments