புதிய மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு விவரம்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ள கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு தற்போது கலந்தாய்வு நிறைவுற்றிருக்கிறது.
இந்த 19 மாவட்டங்களுக்கும் தேர்வு எழுதி நேரடி நியமனம் பெற்ற மாவட்ட கல்வி அலுவலராக தற்போது பணிபுரிந்து வரும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் ஆணை பெற்றுள்ளார்கள்.
மீதமிருக்கும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கான கலந்தாய்வு அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பதவி உயர்வில் சென்ற மாவட்ட கல்வி அலுவலர்களைக் கொண்டு தற்பொழுது நடைபெற்று வருகிறது.
0 Comments