அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.




Click here





சர்வதேச அளவிலான 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் எதிர்வரும் 27 ஜூலை 2022 முதல் 10 ஆகஸ்ட் 2022 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பார்வை (1)இல் கண்டுள்ளவாறு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு மற்றும் பார்வை (2)இல் கண்டுள்ள அரசாணையின்படி அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலும் சதுரங்கப் போட்டிகளை நடத்திடவும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு மாநில அளவில் முகாமை நடத்திடவும், அவ்மாணவர்கள் சர்வதேச சதுங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடச் செய்யவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தி மாணவ, மாணவியரைத் தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.











வழிகாட்டு நெறிமுறைகள்





1. தமிழகம் முழுவதும் உள்ள அரசு: தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகளில் உள்ள விதிமுறைகள் மற்றும் நுட்பங்களைப் பயிற்றுவிக்க ஏதுவாக பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 & 2) மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 0207:2022 க்குள் ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் உள்ள சதுரங்க சங்கங்களைக் (Chess Association)கொண்டோ சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்களைக் கொண்டோ அளிக்கப்பட வேண்டும்.




2 சதுரங்கப் போட்டிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சதுரங்கப் போட்டிகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களை இனம் கண்டு அவர்களின் வாயிலாக 04.07.2022 முதல் 08072022 வரை காலை வணக்கக் கூட்டத்தின்போது சதுரங்க விளையாட்டுக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 




3. மேற்காணும் பயிற்சியைப் பெற்ற ஆசிரியர்களை கொண்டு 1-8ஆம் வகுப்பு வரை, 6-8ஆம் வகுப்பு வரை, 9-10 மற்றும் 11-12 ஆம் வகுப்பு என 4 பிரிவினராக போட்டிகள் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments