இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிலையில் 40 வது தளத்தை அடைந்தாலும் ஆண்டு ஊதிய உயர்வு உண்டு அரசு சார்புச் செயலரின் RTI பதில்.
அனுப்புநர்
திரு.ம.பாலு.M.Com.,
பொதுத் தகவல் அலுவலர் மற்றும் அரசு சார்புச் செயலாளர்.
பொருள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெறப்பட்ட மனு- தகவல் அளித்தல் தொடர்பாக.
பார்வை:
22.04.2022 அன்று இத்துறையில் பெறப்பட்ட தங்களின் 20.04.2022 நாளிட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு,
பார்வையில் காணும் தங்கள் மனுவின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது.
வரிசை எண்கள் 1 முதல் 6 வரை:
2. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யூகங்கள் / தெளிவுரை / கோரும் மனுக்களுக்கு தகவல்கள் அளிக்கப்படுவதில்லை. எனினும் இடை நிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10-இல் ரூ.20600-75900 அரசாணை (நிலை) எண்.90, நிதி (ஊ.பி)த் துறை, நாள்.26.02.2021-இல் திருத்தி என அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை (Level) 10 இல் தளம் (Cell) 40-ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை மேற்கூறிய அரசாணையின்படி தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தங்கள் நம்பிக்கையுள்ள,
பொதுத் தகவல் அலுவலர் மற்றும் அரசு சார்புச் செயலாளர்.
0 Comments