ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை தொலைநிலை மற்றும் ஆன்லைன் வழியில் படித்தாலும் செல்லும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது.
பட்டதாரிகள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளில் சேர்ந்து படித்தால், அவை செல்லாது என்ற விதி ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற படிப்புகளை முடித்த ஏராளமானோர் அரசு பணியில் சேர முடியாமலும்; அரசு வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் போன்றவை பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் வருங்காலங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, யு.ஜி.சி., சார்பில், பிஎச்.டி., அல்லாத பட்டப்படிப்புக்கு வெளியிட்ட விதிகள்:
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்தால் சம்பந்தப்பட்ட பல்கலை அல்லது கல்லுாரி இரண்டு படிப்புகளின் வகுப்புகளும் ஒரே நேரத்தில் இல்லாமல் இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும். ஒரே நேரத்தில் ஒரு படிப்பை நேரடி முறையிலும் இன்னொன்றை தொலைநிலை மற்றும் ஆன்லைன் வழியிலோ அல்லது இரண்டு படிப்பையும் தொலைநிலை மற்றும் ஆன்லைன் வழியிலோ படிக்கலாம்.
யு.ஜி.சி - ஏ.ஐ.சி.டி.இ உள்ளிட்ட அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களே இரட்டை பட்டப் படிப்பு அல்லது டிப்ளமா படிப்புகளை நடத்த முடியும். இந்த அடிப்படையில் இரட்டை பட்டப் படிப்பை நடத்தலாம். அதேநேரம் இந்த விதிகள் அமலுக்கு வரும் முன் இரட்டை பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவை தற்போதைய வழிகாட்டுதல் படி செல்லத்தக்கதல்ல.
0 Comments