மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நேரமில்லை... புலம்பும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நேரமில்லை... புலம்பும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.







கடந்த 4 ஆண்டுகளாக EMIS இணையதளத்தால் ஆசிரியர்களை அமைச்சு பணியாளர்களாக மாற்றிய கொடுரம். தினம் தினம் வேதனையின் உச்சம் தொடும் ஆசிரியர்கள்.



பள்ளியின் வகுப்பறையில் சாக்பீஸ் மற்றும் புத்தகங்கள் பிடித்த ஆசிரியர்கள் இன்று மொபைல் போன் மற்றும் லேப்டாப் மூலம் தினமும் 3 அல்லது 4 தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நிலை.


ஆசிரியர்களை பைத்தியக்காரனாக மாற்றும் கல்வித்துறை.


என்ன நடக்கிறது இந்த கல்வித்துறையில்.


ஆசிரியர்களை எப்போதும் செல்போனிலும் லேப்டாப்பிலுமே மூழ்கியிருக்கும் வகையில் ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் இன்டெர்நெட் வேலையை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.


படிவங்களை பூர்த்தி செய்வது.

புள்ளி விவரங்களை தருவது ஜூம் மீட்டிங்.

ஆன்லைன் ட்ரெயினிங்.

என நிறைய பணிகளை* *கொடுத்துவிட்டு பாடம்* *நடத்தவிடாமல் செய்வதால் மாணவர்களின் படிப்பு வீணாவதுடன் அவர்களை கல்வியறிவு அற்றவர்களாக மாற்றும் நிலைதான் ஏற்படும்.


கடந்த 6,7 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த நாள் காலை பள்ளிக்கு செல்லும் வரை ஆசிரியர்களின் சிந்தனை நாளை மாணவர்களுக்கு என்ன பாடம் எடுக்கலாம், எப்படி பாடக்குறிப்பு எழுதலாம், எந்த துணைக் கருவிகளை பயன்படுத்தலாம், என்ன செயல்பாடுகளை கொடுக்கலாம் என சிந்திப்பார்கள்.


ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பே இல்லை. தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜெராக்ஸ் கடைகளிலும் இன்டெர்நெட் கடைகளிலும் தான் இருக்கிறார்கள்.

 


வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட எக்கச்சக்கமான வேலையை கொடுத்து ஆசிரியர்களை தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாக்கி எப்போதும் மன அழுத்தத்திலேயே வைத்திருக்கிறார்கள்.



இதனால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாகிறது.


ஒரே தீர்வு


தற்போதைய நிலையில் புள்ளிவிவரம் தவிர்க்க முடியாததுதான்.  இதற்காக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்  கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்களை அலுவலக பணியாளராக ஒவ்வொரு பள்ளியிலும் உடனடியாக பணியில் சேர்க்கவேண்டும்.



கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து ஆசிரியர்களை பாடம் நடத்த அனுமதியுங்கள்m



மாணவர்களின் எதிர்காலத்தோடு கல்வித்துறை உயர் அதிகாரிகள் தயவு செய்து விளையாடாதீர்கள்.



நீங்கள் நன்கு படித்த மேதைகள் தான் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Post a Comment

0 Comments